Tuesday, 29 December 2015

Unbelievable But True Incident Happened in Karnataka Bus Stop

அதிசயம் ஆனால் உண்மை.
கர்நாடகாவில் ஒரு தாய்ப் பசு தன் கன்றுடன் ஜன சந்தடிமிக்க அந்த பஸ் நிலையத்தில் சென்று கொண்டிருந்த சமயம் KSRTC பஸ் ஒன்று சற்றும் எதிர்பாராத நேரத்தில் அந்த கன்றின் மீது மோதியதில் பசு கன்று பேருந்தின் முன் அடிப்பக்கத்தில் சிக்கி இறந்துவிட்டது அந்த கன்றை அப்புறப்படுத்தி விட்டனர்.

ஆனால் அன்று முதல் அந்த தாய்ப்பசு அந்த இடத்திற்கு குறிப்பிட்ட பஸ் வரும்போதெல்லாம் இன்னும் தன் கன்று அந்த பஸ்ஸின் அடியில் இருப்பதாக நினைத்து சுற்றி சுற்றி வருவதும் அந்த பஸ்ஸின் முன் அடிப்பக்கத்தில் தேடுவதுமாக இருக்கிறது. KSRTC அதிகாரிகள் பஸ்ஸின் நிறத்தை மாற்றி பார்த்தனர்', சில நாட்கள் சர்வீஸ் ரத்து செய்தனர். ஒன்றும் பலனளிக்கவில்லை. இன்றுவரை அந்த குறிப்பிட்ட பஸ் வரும் போது அந்த தாய்ப் பசுவின் தேடல் தொடர்கிறது .
தாய்மையின் மகத்துமே மெய்சிலிர்க்க வைக்கிறது.

Share:

Archive

Definition List

More Post »

Unordered List

Support

Subscribe To Get All The Latest Updates!

email updates