Thursday, 28 April 2016

Hot Chennai


Share:

Find 6 hidden words


Share:

That Moment When U Plan



That Moment When U Plan
To Go Canteen &
See your Friend's Circle.

Aaiyoo Evanugalaa!!


Share:

Wednesday, 27 April 2016

Thedi thedi Sendru Pesuvathaal thaan Ennavo

Thedi thedi Sendru Pesuvathaal thaan Ennavo enbirkkum Mariyathai Illai
Share:

Mother not expecting money from us.


Mother not expecting money from us
Share:

You Can Use Tamil at Dubai but you cant at Tamilnadu


You Can Use Tamil at Dubai but you cant at Tamilnadu

Degree & B.Tech Gangs Expectations & Reality
Share:

Friday, 22 April 2016

Anbu Aravanaippu

Anbu Aravanippu
Anbu,Akkarai,Aravanaippu,Paasam 
Share:

வெய்யில் கொடுமை எச்சரிக்கையும்; பாதுகாப்பும்,உண்ண வேண்டிய உணவுகள்

வெய்யில் கொடுமை எச்சரிக்கையும்; பாதுகாப்பும்...

கொட்டித்தீர்த்த மழைக்குப் பின் 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் அறவே மழையில்லை. நிலத்தடி நீர் வற்றிவிட்டது. மரங்கள் பெருமளவு வெட்டப்பட்டதால் நிழல், குளிர் இல்லா நிலையில் வறட்சி, வெப்பம் இவற்றின் உச்சம்; கடுமை!

கோடைத் தொடக்கமே கொடுமையாக, கடுமையாக இருப்பதால், உச்சக்கட்ட கோடையின்போது தாங்கமுடியாத தகிப்பு கட்டாயம் இருக்கும். எனவே, இப்போதிருந்தே நாம் எச்சரிக்கையாக, பாதுகாப்பான சில செயல்பாடுகளில் இறங்க வேண்டியது கட்டாயம்.

பருத்தி ஆடை: குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கோடை முடியும் வரை பருத்தித் துணிகளை இறுக்கமின்றி தளர்வாக உடுத்த வேண்டும். மொத்தமான, செயற்கையான ஆடைகளை அறவே தவிர்க்க வேண்டும்.

தலைப்பாதுகாப்பு: தொப்பி அல்லது குடையால் கட்டாயம் தலையில் வெய்யில் தாக்காமல் காக்க வேண்டும். குழந்தைகளை காலை 9 மணிக்கு பின்பும் 5 மணிக்கு முன்பும் வெளியில் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும். நேரடியாக சூரியச் சூடு தலையில் தாக்கினால் மூளைப்  பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படும்.

குடிக்கும் பானம்: ஒரு நாளைக்கு மூன்று லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். மிகவும் குளிர்ந்த நீரைப் பருகக் கூடாது. பிரிட்ஜில் வைத்த நீரைக் கட்டாயம் பருகக் கூடாது. பனிக்கட்டி (அய்ஸ்) சேர்த்து நீர் அல்லது பானங்கள் பருகக் கூடாது. உடல் கொதிப்பேறி இருக்கும் நிலையில் அதிகக் குளிர்ச்சியாய் குடித்தால் நரம்பு பாதிக்கப்படும். சூடான கண்ணாடியில் குளிர்ந்த நீரை ஊற்றினால் கண்ணாடி வெடிக்கும். அதுபோல்தான் உடலும் பாதிக்கப்படும். எனவே, அதிகக் குளிர்ச்சியுடன் குடிக்கக் கூடாது.

நீர்மோர்: அதிகம் தண்ணீர் கலந்த மோரில் இஞ்சி, எலுமிச்சைச் சாறு, கருவேப்பிலை, கொத்தமல்லி கீரை கலந்து பருகுவது நல்லது.

சிறுநீரகத்தைப் பாதுகாக்கும் மோருடன் வெள்ளரிப் பிஞ்சு: வெள்ளரிப் பிஞ்சை சிறு துண்டுகளாக்கி அதை மோரில் போட்டு சிறிது உப்பு கலந்து நன்குக் கலக்கி நாள்தோறும் முற்பகல் 11.30 மணிக்கும், பிற்பகல் 4 மணிக்கும் மென்று சாப்பிட வேண்டும். இது சூடு தணிக்கவும், தாகம் தீர்க்கவும் உதவுவதோடு, நமது சிறுநீரகம் பாதிக்கப்படாமல் இருக்க பெரிதும் உதவும். சிறுநீர்க் கடுப்பு வராது. வெய்யிலில் சிறுநீரகம் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. எனவே, இது கட்டாயம்.

உணவு: காரம், புளிப்பு, உப்பு, கொழுப்பு நிறைந்த உணவு கூடவே கூடாது. பழங்கள், கீரை, காய்கறிகள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இளநீர்: இதற்கு இணையான பானம் எதுவும் இல்லை. தினம் ஒரு இளநீர் அல்லது நான்கு நுங்கு சாப்பிட வேண்டும். செயற்கைக் குளிர்பானங்கள்; பழச்சாறுகளை அறவே சாப்பிடக் கூடாது. அவை முழுக்க முழுக்க நலத்திற்குக் கேடானவை. நாகரிக வேட்கையில் இவற்றைப் பருகக் கூடாது.

மாதுளை: வெய்யிலுக்கு மிகவும் உகந்த பழம் மாதுளை. தினம் ஒரு மாதுளை எல்லோரும் கட்டாயம் சாப்பிட வேண்டும்.

தர்பூசணி, கொமுட்டி பழங்கள்: இவை இரண்டும் ஒரே வகைதான். சுத்தமான கலப்படமில்லா தர்பூசணி வெய்யிலுக்கு மிகவும் ஏற்றது, மலிவானது. கட்டாயம் சாப்பிட வேண்டும்.

பானைநீர்: மண்பானை வாங்கி அதை மணல்மேட்டில் வைத்து பானையில் நீர் ஊற்றி குளிந்£ பின் அதைப் பருகுவது வெய்யிலுக்கு ஏற்றது.

சந்தனம்: உடலுக்கு மெல்லியதாக தூய சந்தனத்தைப் பூசிக் கொள்ளலாம்.

சோற்றுக் கற்றாழை: வெய்யிலுக்கு சோற்றுக் கற்றாழை அரிய உணவு. இது மேற்பூச்சிக்கும் மிகுந்த பயன்தரும்.

சோற்றுக் கற்றாழையை பிளந்து அதிலுள்ள சோற்றை எடுத்து,  அதை 7 முறை அலசி அதனுடன் தேன் சேர்த்து உண்ண வேண்டும். இது உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு, உடல் உறுப்புகளைப் பாதுகாக்கும். பெண்களுக்கு மிகவும் உகந்தது.

சிறுநீர்: கோடையில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வராது. அதனால் கழிக்காமல் இருப்பது தப்பு. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழிக்க வேண்டும்.

இயற்கை நிழல்: கோடையில் குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பதைவிட தோப்பு, பூங்கா என்று இயற்கை நிழலில் இருப்பது உகந்தது. குறிப்பாக வேப்ப மரம், புங்க மரம், ஆலமரம், மாமரம் போன்றவற்றின் நிழல் உடலுக்கு மிகவும் ஏற்றது.

புளிய மரம், கருவேல் மரம், முருங்கை மரம் போன்றவற்றின் நிழலைத் தவிர்க்கவும்.

பதனீர்: பனையின் பாளையிலிருந்து கிடைக்கும் பதனீர் கோடைக்கும், உடலுக்கும் ஏற்றது. தூய்மையான பதனீர் என்பதை உறுதிசெய்து பருகவும்
ஜ¦னி வேண்டாம்: ஜீனியைத் தவிர்த்து வெல்லம் அல்லது பனைவெல்லத்தைப் பயன்படுத்த வேண்டும். ஜீனி உடல்நலத்திற்குக் கேடு பயக்கும். ஜீனியை எவ்வளவு தவிர்க்க முடியுமோ அவ்வளவு உடல் நலத்திற்கு நல்லது. வெல்லமும், பனைவெல்லமும், உடலுக்கு நலம் தந்து, இரும்புச் சத்தை ஏராளமாய் தரும். இனிப்புக்கு வெல்லத்தை மட்டுமே பயன்படுத்துங்கள். ஜீனி வேண்டாம்.

டீ, காபி வேண்டாம்: வெய்யில் நேரத்தில் டீ, காபி வேண்டாம். அப்படியே பருகினாலும் அதிக சூட்டில் பருக வேண்டாம்.

புகை வேண்டாம்: புகைப் பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். வெய்யில் காலத்தில் புகைப்பதைப் போன்ற கொடிய செயல் வேறு இல்லை.

இருமுறை குளிக்கவும்: பொதுவாக இருமுறை குளிப்பது நல்லது. கோடையில் கட்டாயம் குளிர்ந்த நீரில் இருமுறை குளிக்க வேண்டும்.

நீரை வீணாக்கக் கூடாது: கோடையில் தண்ணீர்ப் பஞ்சம் கடுமையாய் இருக்கும். எனவே, தண்ணீரைக் சிக்கனமாகப் பயன்படுத்தவும்.

அம்மையைத் தடுக்கும் வேம்பும் மஞ்சளும்: வெய்யில் காலத்தில் அம்மை நோய் வரும். எனவே, ஒருபிடி வேப்ப இலையுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நீர் ஊற்றி, நீர் மூன்றில் ஒரு பங்காக சுண்டியதும் இறக்கி ஆறவைத்து 10 மில்லி அளவு அச்சாற்றைப் பருகினால் அம்மை வராது. வந்தாலும் விரைவில் குணமாகும்.

அம்மை வந்தால் இ¬ தினம் மூன்றுவேளை பருக வேண்டும். சாற்றின் அடியில் தங்கும் மஞ்சள் படிவை உடலில் பூசவேண்டும்.

பேயம்பழம் சாப்பிட வேண்டும்: அம்மைக்கு உகந்த பழம் பேயம் பழம். தவறாது தினம் நான்கு பழம் சாப்பிட வேண்டும்.

வெய்யிலில் விளையாடக் கூடாது: காலை 9 மணிக்கு பிறகும் மாலை நான்கரை மணிக்கு முன்பும் விளையாட வேண்டாம். இளைஞர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும்.

கம்புக் கூழ்: வெய்யில் காலத்திற்கு கம்புக் கூழ் மிகவும் ஏற்றது. சின்ன வெங்காயத்தைக் கடித்துக் கொண்டு கம்புக் கூழ் சாப்பிட்டால் சுவையும் சுகமும் ஏற்படும்.

இரவு மிகுந்த சோற்றில் நீர் ஊற்றி அதில் சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு காலையில் சோறு, நீர், வெங்காயம் மூன்றையும் சேர்த்து உண்டால் நாள் முழுக்க வெம்மையைத் தாங்கும், உடல் குளிர்ச்சியடையும்.

மணத்தக்காளி: உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியூட்டுவதில் மணத்தக்காளி சிறந்தது. எனவே, வாரம் மூன்று நாள் இதை உணவில் வேர்க்கவும்.

கீழாநெல்லி: மஞ்சள்காமாலை வருவதை இது தடுக்கும். எனவே, கீழாநெல்லி கீரையை கூட்டு செய்து இரண்டு உருண்டை சோற்றில் பிசைந்து வாரம் ஒருமுறை சாப்பிடவும்.

வெந்தயம்: ஒரு ஸ்பூன் வெந்தயத்தை நீரில் ஊறவைத்து தினம் சாப்பிட்டால் உடலுக்குக் குளிர்ச்சி. சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.

search Keywords:how to overcome this summer,summer foods to eat,food to avoid in summer,best foods for summer,best drinks for summer,healthy food for summer,Summer remedies,how to avoid heat borne disease,how to avoid summer time health problems

Share:

Wednesday, 20 April 2016

Which one thing kills


Which one thing kills a strong relationship?

1.Misunderstanding 
2.Doubt
3.Ego
4.Attitude
5.Reminding past mistake


Share:

Na unaku epadi patta wife?


Share:

Tuesday, 19 April 2016

Letter From a Mother to her Daughter

Letter From a Mother to her Daughter

“My dear girl, the day you see i am getting old, I ask you to please be patient, but most of all, try to understand what i am going through. If when we talk, I repeat the same thing a thousand times, don’t interrupt to say: “You said the same thing a minute ago”… Just listen, please. Try to remember the times when you were little and I would read the same story night after night until you would fall asleep.

When I don’t want to take a bath, don’t be mad and don’t embarrass me. Remember when I had to run after you making excuses and trying to get you to take a shower when you were just a girl?

When you see how slow I am when it comes to new technology, give me the time to learn and don’t look at me that way… remember, honey, I patiently taught you how to do many things like eating appropriately, getting dressed, combing your hair and dealing with life’s issues every day… The day you see i am getting old, I ask you to please be patient, but most of all, try to understand what  i am going through.

If I occasionally lose track of what we are talking about, give me the time to remember, and if I can’t, don’t be nervous, impatient or arrogant. Just know in your heart that the most important thing for me is to be with you.

And when my old, tired legs don’t let me move as quickly as before, give me your hand the same way that I offered mine to you when you first walked during childhood.

When those days come, don’t feel sad… just be with me, and understand me while I get to the end of my life with love.

I’ll cherish and thank you for the gift of time and joy we shared. With a big smile and the huge love i have always had for you, I just want to say, I love you… ”

Share:

Saturday, 16 April 2016

We all had that one Teacher




We all had that one Teacher
That we had crush upon in our Life
Share:

We are in a country



We are in a country where communication skills
Decides the job factor of an engineer rather than his talent

Share:

Thudithu pogiraen yarukum unnai

Thudithu pogiraen yarukum unnai 


Thudithu pogiraen yarukum unnai vittu kodduka mudiyaamal thavitthu pogiraen
Unnai ennudan thakkavaithu kolla mudiyaamal
Share:

சும்மா இருப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல-குட்டி கதை

குட்டி கதைகள்
சும்மா இருப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல-குட்டி கதை


ஒரு ஊர்ல ஒரு கோவில் இருந்தது , அரசாங்கம் அந்த கோயிலை பராமரித்து வந்தது . அதிகாரிகள் அவ்வப்போது வந்து கணக்கு வழக்குகளை சரி பார்ப்பது வழக்கம் .
அந்த வகையில் , ஒரு சமயம் அரசாங்க அதிகாரி அங்கே வந்தார் . கோயில் நிர்வாக அதிகாரி கணக்கு புத்தகங்களையும் மற்ற பதிவேடுகளையும் எடுத்து அவர் முன்னால் வைத்தார்
வந்த அதிகாரி , கோயில் செலவு கணக்கு பார்த்து கொண்டு வந்தார் ." சும்மா இருக்கும் சாமியாருக்கு ஒரு பட்டை சோறு ".. என்று தினசரி செலவு பட்டியலில் எழுதபட்டிருந்தது.
அதை பார்த்த அவர் " சும்மா இருக்கிறவருக்கு எதுக்காக சோறு போடணும் ? அதை உடனே நிறுத்துங்கள் ! என்று ஆணையிட்டார் .
உடனே ஆலய ஊழியர்கள் , அதிகாரிகளை நெருங்கி மெல்ல சொன்னார்கள் : "ஐயா சும்மா இருப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல ... அதனால் தான் அவருக்கு சோறு வழங்குகிறோம் !"
இந்த விளக்கம் அந்த அதிகாரிக்கு திருப்தி அளிக்கவில்லை . எனவே ,அதுபற்றி ஒன்றும் சொல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டார் , வந்த பிறகு ஒரு சாய்வு நாற்காலியில் உக்காந்து யோசிக்க ஆரம்பித்தார்
" சும்மா இருப்பது என்ன அவ்வளவு கடினமான காரியமா ? கொஞ்ச நேரம் நாமும்தான் சும்மா இருந்து பார்ப்போமே !" முயன்று பார்த்தார் . மனம் அலைய ஆரம்பித்தது ....அடங்க மறுத்தது .
சரி , கொஞ்ச நேரம் கண்களை மூடி தியானம் செய்து பார்க்கலாம் , முயன்றார் ' வயிறு பசிக்கிறது போலிருக்கிறதே ! என்று நினைத்தார்
ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டினார் கவனத்தை அதில் செலுத்தினார் . காகம் ஒன்று எங்கோ கத்துகிற சத்தம் அவர் காதில் விழுந்தது . கண்களையும் காதுகளையும் கட்டுபடுத்த முயன்றார்
மனம் எதிர்காலத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்தது . மகளுக்கு மாப்ளை தேட வேண்டும் ,மகனுக்கு வேலை தேட வேண்டும் , மறுபடி எதையும் நினைக்காமல் தியானம் செய்ய முயன்றார்
திடீர் என ஒரு மணம் வந்து மூக்கை தொடுகிறது . கண் விழித்து பார்கிறார்
மனைவி கொண்டு வந்து வைத்து விட்டு போன சூடான காபி எதிரே மேஜை மீது இருக்கிறது .அதை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்
" மனம் - தியானம் இரண்டும் ஒன்றுகொன்று சம்பந்தம் உள்ளது " என்று நினைக்கிறார் . அது அப்படி அல்ல : மனம் முடிந்து போகிற இடத்தில தான் தியானம் ஆரம்பமாகிறது
எனவே , தியானம் இருக்கிற இடத்தில மனம் இல்லை . மனம் செயல் படுகின்ற வரையில் தியானமும் அரம்பமவதில்லை "
அதிகாரி திணறி போனார் . அவருக்கு ஊழியர்கள் கட்டுபடுகிறார்கள் , உள்ளே இருக்கிற அவர் மனம் கட்டுப்பட மறுக்கிறது
அதிகாரி அலைபாய்கிற மனதை அடக்க முயன்று , அது முடியாமல் சோர்ந்து போனார். " சும்மா இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் ! என்பது அவருக்குபுரிந்தது
உடனே மறுபடியும் புறப்பட்டு அந்த கோவிலுக்கு போனார், பதிவேட்டை கொண்டு வர சொன்னார். அதில் இப்படி எழுதினார் : " சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !"
Share:

வெற்றியின் ரகசியம்

வெற்றியின் ரகசியம்!
வெற்றியின் ரகசியம்

"அதனால் என்ன? அடுத்து என்ன?'
வாழ்க்கையில் முழுமையான வெற்றி சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. அந்த
சிலருக்கு மட்டுமே தெரிந்த வெற்றியின்
ரகசியம், பலருக்கும் பயன்பட வேண்டும் என்ற
நோக்கத்தில் உருவானதுதான் இந்த வழிகாட்டி
பதிவ. பல்வேறு துறைகளில்
சாதனையாளர்களை நேரில் சந்தித்து அறிந்த
குணநலன்களையும், வாழ்க்கையில் பல
அம்சங்களைத் தெளிவு படுத்திய சிறந்த நூல்களின் சாராம்சங்களையும், ஒன்று
சேர்த்து குழைத்ததில் கிடைத்த வண்ணக் கலவையை, சமூக அக்கறையெனும்
தூரிகையால் வரைந்த ஓவியம் தான், "வெற்றியின் ரகசியம்' என்னும் இந்த பதிவு.

Also Read: Read Short Stories

விடாமுயற்சி!
ஓரிரு முறை முயற்சி செய்து விட்டு,
"இதற்கு மேல் என்னால் முடியாது...' என்று சொல்பவன் சராசரி. "என் லட்சியத்தை எட்டும்
வரை, முயற்சி செய்து கொண்டேயிருப்பேன்...' என்று சொல்பவன், சாதனையாளன்.
தோல்வியால் துவண்டவர் களை, இந்த உலகம் நினைவில் வைத்திருப்பதில்லை. தோல்வி
உங்களுக்கு, புதிய உற்சாகத்தையும்,
வைராக்கியத்தையும் கொடுக்க வேண்டுமே தவிர, விரக்தியைக் கொடுக்கக் கூடாது.
யாருக்கும் முதல் முயற்சியிலேயே, மிகப் பெரிய வெற்றி கிடைத்து விடுவதில்லை.
தடைக்கற்களை, முன்னேற்றத்துக்கான
படிக்கற்கள் என்று நினைத்துக் கொள்வோம்.
"வீழ்ந்தோம்' என்று இந்த உலகம், நம்மைப் பற்றிச் சொல்லும் போது, அதே உலகம், "வென்றோம்'
என்று சொல்லும்படி சாதித்துக் காட்டுவோம்.
தோல்வி என்றைக்கும் நிரந்தரமானதல்ல.
நம்முடைய முயற்சிகளில், சில தோல்வியைத் தழுவலாம். ஆனால், முயற்சியே எடுக்காமல் விட்டு விட்டால், நம்முடைய வாழ்க்கையே
தோல்வியில் முடியும். உடனுக்குடன் பலன் எதிர்பார்ப்பது, உடனே பலன்
கிடைக்காவிட்டால், சோர்ந்து விடுவது சிறுபிள்ளைத்தனம். பிரச்னையை கண்டு, ஓடி
ஒளிவது கோழைத்தனம். ஓடி ஒளிவதால், பிரச்னைக்குத் தீர்வு கிடைப்பதில்லை.

Also Read: Memes For All Situations

பிரச்னையின் தன்மைக்கேற்ப, தீர்வு உடனே கிடைக்கலாம் அல்லது சில காலம் கழித்துக் கிடைக்கலாம்.
விடாமுயற்சியால், வரலாற்றில்
இடம் பெற்ற சிலரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்:
சிறுபிள்ளையாக இருக்கையில்,
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட வில்மாருடாப் என்ற பெண்மணி, 1960 ஒலிம்பிக்கில், ஓட்டப்
போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார். ஐந்து வயதில் இளம்பிள்ளை
வாதத்தால் பாதிக்கப்பட்ட ஷெல்லிமான், 1956
ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில், தங்கப் பதக்கம் பெற்றார்.
ஒரு ஊருக்குச் செல்வதற்கு, பல வழிகள் இருப்பது போல, நம்முடைய இலக்கை அடைவதற்கும், பல்வேறு வழிகள் உள்ளன. ஒரு
வழி அடைபட்டால், மாற்று வழி பற்றி யோசிக்க வேண்டும். மிகப் பிரபலமான விஞ்ஞானி,
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம், முட்டாள் தனத்துக்கு விளக்கம் கேட்ட போது, "ஒரே வேலையை,
திரும்பத் திரும்ப ஒரே மாதிரி செய்துவிட்டு, வித்தியாசமான பலனை எதிர்பார்ப்பதற்கு
பெயர் தான் முட்டாள்தனம்...' என்றாராம்.
அலெக்சாண்டர் கிரகாம் பெல், காது கேளாத தன் மனைவிக்கு, காது கேட்பதற்காக கருவி
கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது தான், தொலைபேசியைத் தற்செயலாக
கண்டுபிடித்தார். உங்களுக்குப் புதிய வாய்ப்பு, பிரச்னை உருவத்தில் வரலாம்
என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நமக்குத் தோல்வியோ, பின்னடைவோ வரும்
போது, நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள் இதோ...
"தோல்வி அல்லது பின்னடைவுக்கு என்ன காரணம்?
எங்கே தவறு நடந்தது? நான் இதிலிருந்து கற்றுக் கொண்ட பாடம் என்ன? இனிமேல் இந்த
மாதிரி தவறு நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?'
சாதனையாளர்கள், தங்களுடைய முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று விடுவதில்லை.
தான் இழந்த நாட்டை மீட்கப் போராடிய ராபர்ட் புரூஸ், இந்தியாவுக்குக் கடல்வழி
கண்டுபிடித்த வாஸ்கோடகாமா, எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த எட்மண்ட் ஹிலாரி மற்றும்
டென்சிங் போன்ற பலரும், தங்களின் முதல் முயற்சியிலேயே வெற்றி பெறவில்லை.
தேசிய கவி பாரதியாரும், கவிஞர்
கண்ணதாசனும், தங்களின் ஆரம்பகால கவிதைப்
போட்டியில், முதல் பரிசு பெறவில்லை.
அமெரிக்கா ஜனாதிபதியாகி,
அடிமைத்தனத்தை ஒழித்து, வரலாறு படைத்த ஆபிரகாம் லிங்கன், ஜனாதிபதித் தேர்தலில்
வெற்றி பெறுவதற்கு முன், ஐந்து முறை பல்வேறு தேர்தல்களில் தோல்வியைத் தழுவியவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தங்கள் பிள்ளை சரியாகப்
படிக்கவில்லையே என்று புலம்பும்
பெற்றோருக்கு, விஞ்ஞானி எடிசனின் நிஜவாழ்க்கைக் கதை தைரியமூட்டும்.
மின்சார விளக்கு உட்பட, ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கண்டுபிடிப்புகளுக்குச்
சொந்தக்காரரான விஞ்ஞானி, தாமஸ் ஆல்வா எடிசனுக்கு, காது சரிவரக் கேட்காது.
மூன்று மாதமே பள்ளியில் படித்தவர்.
"அடிமக்கு' என்று, ஆசிரியர்களால் முத்திரை குத்தப்பட்டு, பள்ளியிலிருந்து
நிறுத்தப்பட்டார். ஆயிரம் முறை புதுப்புது வழிகளில் முயற்சி செய்தும், மின்சார
விளக்கைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதைப் பார்த்து, மற்றவர்கள் கிண்டல் செய்த
போது, "நான் ஆயிரம் வழிகளில் மின்சார விளக்கு எரியாது என்ற உண்மையைக் கண்டுபிடித்தேன் அல்லவா?' என்று தமாசாகப்
பதிலளித்தார். தன், 67 வயதில், இவரது ஆராய்ச்சி மையம், தீ விபத்தில் சாம்பலாகியது. அப்போது, அவர், "பரவாயில்லை, கடவுள் புதிய கண்டுபிடிப்புக்கு வழி வகுத்துக் கொடுத்துள்ளார்...' என்று கூறினார்.
விடா முயற்சிக்கும், மனவலிமைக்கும் எடிசனைத்
தவிர, வேறு யாரை உதாரணமாகச்
சொல்லுவது? பீதோவன் காது கேளாதவர். இளம் வயதில்,
இசை ஞானம் இல்லாதவர் என்று ஒதுக்கப்பட்டவர்.
ஆனால், பிற்காலத்தில் உலகிலேயே உன்னதமான இசையை உருவாக்கியவர் என்று
புகழப் பட்டார். மிகச் சிறந்த அமெரிக்க ஜனாதிபதிகளில் ஒருவராகக் கருதப்பட்ட
ப்ராங்ளின் ரூஸ்வெல்ட், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, இரண்டாம் உலகப் போரின் போது,
அமெரிக்காவை வழி நடத்தி வெற்றி கண்டார்.
நேருவுக்கு பின், இந்தியப் பிரதமரான லால்பகதூர் சாஸ்திரி, பள்ளிக்குச் செல்வதற்கு தினமும் ஆற்றைக் கடந்து செல்ல
வேண்டியிருக்கும். ஆற்றின் குறுக்கே, பாலம் இல்லாததால், புத்தகத்தையும், கழற்றிய
உடையையும், தலைக்கு மேல் சுமந்தபடி நீச்சலடித்து, தினமும் அக்கரையை அடைந்திருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி
அப்துல் கலாம், அதிகாலையில் வீடு வீடாகச் சென்று பேப்பர் போட்டு, பள்ளிக்குச் சென்றிருக்கிறார். இப்படிச் சொல்ல ஆரம்பித்தால், சுதந்திர இந்தியாவில், அடி
மட்டத்திலிருந்து புகழின் உச்சத்தை
அடைந்தவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
மிகச் சிறந்த சாதனையாளர்கள் கூட, ஆரம்ப காலத்தில் தடுக்கி விழுந்திருக்கின்றனர்.
"போர்டு' என்ற கார் கம்பெனியை நிறுவி, புதிய கார்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்திய கோடீஸ்வரரான ஹென்றி
போர்டு, முதல் காரை உருவாக்கும் போது, ரிவர்ஸ் கியரைப் பொருத்த மறந்து விட்டார்.
தோல்வியடைந்து விடுவோமோ,
அவமானப்பட்டு விடுவோமோ என்று பயந்தே, பலர் முயற்சி செய்வதேயில்லை.
இன்று, உலகிலேயே மிகப்பெரிய
பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும்
பில் கேட்சும், ஆப்பிள் நிறுவனத்தின் மூலம்,
கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்திய, ஸ்டீவ்
ஜாப்ஸ் ஆகிய இருவரும், கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே விட்டவர்கள். பில்கேட்ஸ், தன்
நண்பரோடு, வீட்டில் கார் நிறுத்துமிடத்தில் ஆரம்பித்த நிறுவனம் தான், உலகப் புகழ்பெற்ற
மைக்ரோசாப்ட். இந்திய கம்ப்யூட்டர் துறையில் முத்திரை பதித்த நாராயணமூர்த்தி,
கையிலிருந்த வேலையை விட்டு விட்டு, இந்தியாவை கம்ப்யூட்டர் துறையில் முன்னணிக்குக் கொண்டு வர வேண்டுமென்ற
நோக்கத்தில், கம்ப்யூட்டர் தொழில் துவங்க நினைத்தார். இவரது ஆரம்பகால முயற்சி,
தோல்வியைத் தழுவியது.
இறுதியில், தொழில் துவங்க கையில் பணமில்லாமல்
திண்டாடிய போது, மனைவி தன் நகையை விற்றுக் கொடுத்த, 10,000 ரூபாயை வைத்து, மற்ற நண்பர்களுடன் துவங்கிய நிறுவனம் தான்,
இன்று இந்தியாவில் முன்னணியில் இருக்கும்
கம்ப்யூட்டர் நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ்.
தனக்கு நிறைய திறமையிருந்தும், அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படுபவர்கள், ஒன்றை நினைவில் வைத்துக்
கொள்ளுங்கள். புகழின் உச்சிக்குச் சென்ற பலர், ஆரம்ப காலத்தில் அங்கீகாரம் கிடைக்காமல்,
போராட நேர்ந்திருக்கிறது. ஒரு துறையில் சாதனை படைக்க, இளம் மேதையாக இருந்திருக்க வேண்டுமென்ற கட்டாயம்
இல்லை. ஆர்வமும், ஈடுபாடும், திறமையும், உழைப்பும் இருந்தால், எந்த வயதிலும் சாதனை
படைக்கலாம். மிகச்சிறந்த சாதனையாளர்கள்
துரதிர்ஷ்டவசமாக சறுக்கி விழ நேர்ந்தாலும், அவர்களுடைய தன்னம்பிக்கையும், கம்பீரமும்
சற்றும் குறைவதில்லை.
எல்லா தோல்விகளும், அனைவரையும் ஒரே
மாதிரி பாதிப்பதில்லை. உதாரணமாக, தேர்வு, போட்டி, வியாபாரம் மற்றும் காதலில்
தோல்வியடைந்தவர்களில், தற்கொலை செய்து கொள்பவர்கள் ஒரு ரகம். ஆனால், அவர்களை விட
மோசமான தோல்வியடைந்தவர்கள்,
"பரவாயில்லை, எனக்கு இது ஒரு நல்ல பாடம்...'
என்று ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கொள்பவர்கள் மறு ரகம்.
நாம் இந்த இரண்டாவது ரகத்தைச் சார்ந்தவராக இருக்கலாம்! எப்போதெல்லாம் பிரச்னை மற்றும்
தோல்வியைச் சந்திக்க நேர்கிறதோ, அப்போது இரண்டு கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக்
கொள்வோம்,
"அதனால் என்ன?
அடுத்து என்ன?
Share:

Tuesday, 12 April 2016

When you see your roll number

When you see your roll number
When you see your number being listed first in the exam hall seating
Share:

Appavin Thol Meethu..

Appavin Thol Meethu..

Appavin thol meethu aeri Saami paarkum palyathil therinthae illai?
Saamiyin thol mel thaan irukkiraen endru
Share:

Monday, 11 April 2016

Dye Adicha Mandaiyum,Friends Potta Sandaiyum

Dye Adicha Mandaiyum,Friends Potta Sandaiyum
Dye Adicha Mandaiyum,Friends Potta Sandaiyum
Romba Naal Nilaichatha Saritharamae illa
Nanbenda!!!!
Share:

Friend Request Anupinaen Enna Aachu

Friend Request Anupinaen Enna Aachu
Me:Friend Request Anupinaen, Enna Aachu
She:Naan Yosichu Solluraen

Share:

Sunday, 10 April 2016

உயிரைக் காப்பாற்றியவரைக் காண ஆண்டுதோறும் 5 ஆயிரம் கி.மீ. பயணிக்கும் பென்குயின்!

 உயிரைக் காப்பாற்றியவரைக் காண ஆண்டுதோறும் 5 ஆயிரம் கி.மீ. பயணிக்கும் பென்குயின்! Publish

உயிரைக் காப்பாற்றியவரைக் காண ஆண்டுதோறும் 5 ஆயிரம் கி.மீ. பயணிக்கும் பென்குயின்!
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் தனது உயிரைக் காப்பாற்றிய மீனவரைக் காண்பதற்காக ஆண்டுதோறும் சுமார் 5 ஆயிரம் கி.மீ. தூரம் பென்குயின் பறவை ஒன்று பயணிப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலின் தலைநகர் ரியோ டி ஜெனிரோவுக்கு அருகில் உள்ள சிறிய
கடற்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாவோ பெரைரா டி சோசா (71). மீனவரான இவர் கடந்த 2011-ல் உடல் முழுவதும் எண்ணெய் படலத்தால் சூழப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பென்குயின் குட்டி ஒன்றைக் காப்பாற்றி, அதற்கு ‘டின்டிம்’ என்று பெயரிட்டு வாழ்வளித்தார்.
Also Read More Short stories Like this


அவருடன் சுமார் 11 மாதங்கள் தங்கியிருந்த அந்த பென்குயின்,அதன் பின்னர் கடலுக்குள் சென்றது. ஆனாலும், தனது உயிரைக் காப்பாற்றிய மீனவ நண்பரை மறக்காத பென்குயின், அவரைக் காண ஆண்டுதோறும் சுமார் 5 ஆயிரம் கி.மீ. தூரம் பயணித்து வருகிறது. இது கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வருகிறது.
Share:

அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை

அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை

அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை.
ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது.
இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது.
மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது.
முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு வந்தாள்.

Also Read கருகிய ரொட்டி எ பி ஜெ அப்துல் கலாம் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான கதை 


கேட்டபோது சொன்னாள்
“நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.
வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன்
குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்”.. அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை சொன்னார்
“அன்பு என்றால் இதுதான்”.
உங்களால் உலகிற்கு எதையேனும் இலவசமாகக் கொடுக்க முடியும் என்று நினைத்தால் அன்பைக் கொடுங்கள்... ஏனெனில் உலகம் அதற்குத்தான் அதிகமாக ஏங்கிக் கிடக்கின்றது.
Share:

Saturday, 9 April 2016

காலையில் புல் சார்ஜ் போட்ட மொபைல்

Kaalaiyil full Charge potta mobile,saayungaalam paarkirappo 95% irunthathuna,
Annakki naama Urupadiya Vaazhnthirkkomnu artham
Share:

Wednesday, 6 April 2016

How the Mechanical Engineer Marriage Ring Look like

Mechanical Engineer marriage ring,Mechinal Engineer engagement ring,present day mechanical engineer marriage rings

Share:

When you miss Someone..

When you miss someone,
you Re-Read conversations and smile like an idiot.

Missing Someone is the best feeling when we think of the time we spend with them.

missing love quotes,miss you love quotes,miss me love quotes

Share:

கோடை காலம் மது அருந்தும் பொழுது கடைபிடிக்க வேண்டியவை

It's Summer things to be keep in Mind while Drinking Liquors

🍺கோடை காலம் மது அருந்தும் பொழுது கடைபிடிக்க வேண்டியவை:-
🍺மதுவை கப்பில்(கிளாஸ்) ஊற்றும் போது maximum -small அளவு ஊற்றி கொள்ளுங்கள்.
🍺மது எந்த அளவு ஊற்றி கொள்கிறீர்களோ அதற்கு நான்கு மடங்கு சுத்தமான தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
🍺எக்காரணத்தை கொண்டும் தண்ணீருக்கு பதிலாக பெப்சி,கோக்,மெரிண்டா போன்ற குளிர்பானங்கள் சேர்க்க கூடாது.
🍺கோடை காலம் என்பதால் இளநீர் சேர்த்து குடிப்பதை கண்டிப்பாக தவிக்கவும்
🍺முதல் ரவுண்ட் குடித்த பின்பு மறு ரவுண்ட் குடிப்பதற்கு குறைந்தது 15 நிமிடங்களாவது இடைவெளி எடுத்து கொள்ளுங்கள்.
🍺மது அருந்துவதற்கு சைடிஸ் ற்கு கேரட்,வெள்ளரி,பப்பாளி,பீன்ஸ், கோஸ், அன்னாச்சு,வெள்ளை திராட்சை போன்றவைகளை பயன்படுத்துங்கள்.
🍺அசைவ விரும்பிகள் நன்கு வேக வைத்த ஆட்டுக்கறி,சுட்டமீன்,குழம்பு மீன்,போன்றவைகளை உண்ணலாம்.
🍺சிக்கன்,வருத்த சிக்கன்,மீன்,சிக்கன் சார்ந்த உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
🍺ஊறுகாய், சிப்ஸ்,காரவகை, எண்ணையில் பொறித்த தின்பண்டங்களை அறவே ஒதுக்கவும்.
🍺அவசர குடி அவசர வார்டுக்கு கொண்டு செல்லும் கவனம்.
��மது நாட்டுக்கு வீட்டுக்கு கேடு
                🙏  நன்றி🙏

way to drink liquor in summer,

Share:

Mystery Solved

Mystery was solved by westindians

Share:

Yethana Arrear nu Solla Vetka Padravan..

Yethana Arrear nu Solla Vetka Padravan..
Yethana Arrear nu Solla Vetka Padravan
Engineering Padikkavae vetka Padanmu
Share:

How to Save Your Heart?

How to Save Your Heart?
Should Never Expect,Should Never demand,Should never assumer
Know your limits,Know where to stand,Know your role
Dont get affected,Dont get jealous,Dont get paranoid
Just go with the flow and stay happy
Share:

Archive

Definition List

More Post »

Unordered List

Support

Subscribe To Get All The Latest Updates!

email updates