Definition List

header ads

உயிரைக் காப்பாற்றியவரைக் காண ஆண்டுதோறும் 5 ஆயிரம் கி.மீ. பயணிக்கும் பென்குயின்!

 உயிரைக் காப்பாற்றியவரைக் காண ஆண்டுதோறும் 5 ஆயிரம் கி.மீ. பயணிக்கும் பென்குயின்! Publish

உயிரைக் காப்பாற்றியவரைக் காண ஆண்டுதோறும் 5 ஆயிரம் கி.மீ. பயணிக்கும் பென்குயின்!
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் தனது உயிரைக் காப்பாற்றிய மீனவரைக் காண்பதற்காக ஆண்டுதோறும் சுமார் 5 ஆயிரம் கி.மீ. தூரம் பென்குயின் பறவை ஒன்று பயணிப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலின் தலைநகர் ரியோ டி ஜெனிரோவுக்கு அருகில் உள்ள சிறிய
கடற்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாவோ பெரைரா டி சோசா (71). மீனவரான இவர் கடந்த 2011-ல் உடல் முழுவதும் எண்ணெய் படலத்தால் சூழப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பென்குயின் குட்டி ஒன்றைக் காப்பாற்றி, அதற்கு ‘டின்டிம்’ என்று பெயரிட்டு வாழ்வளித்தார்.
Also Read More Short stories Like this


அவருடன் சுமார் 11 மாதங்கள் தங்கியிருந்த அந்த பென்குயின்,அதன் பின்னர் கடலுக்குள் சென்றது. ஆனாலும், தனது உயிரைக் காப்பாற்றிய மீனவ நண்பரை மறக்காத பென்குயின், அவரைக் காண ஆண்டுதோறும் சுமார் 5 ஆயிரம் கி.மீ. தூரம் பயணித்து வருகிறது. இது கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வருகிறது.

Post a Comment

0 Comments